search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோலி பண்டிகை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள் என்றார்.

    வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது.
    • அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது கிரிக்கெட் திறமையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்பவான் தற்போது சமூக வலைதளங்களிலும் பிசியாக இருக்கிறார்.

    வெவ்வேறு வண்ணங்களில் மூடப்பட்டிருக்கும் உணவு தட்டை வைத்திருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சின், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்!" "என் தட்டில் என்ன இருக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா?" என்று ரசிகர்களிடம் கேட்டார்.


    இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது. அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 8-ம் தேதியும், சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தஹனம் மார்ச் 7-ம் தேதியும் கொண்டாடப்படும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013-ல் விளையாட்டில் இருந்து விடைபெற்றார். 

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பகுதியில், ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில், ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, திருப்பூரில் உள்ள பணியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து, ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    இதே போல் நாளையும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு மாநகர் பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.

    குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சா கமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    மேலும் ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர்.

    ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள்.
    • இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    அப்போது அங்கு வந்த ஒரு அமைப்பினர் இந்து மாணவர்களை ஹோலி கொண்டாடக்கூடாது என கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் கேத் குமார் என்ற மாணவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக துணைவேந்தர் கூறும் போது, பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி நிகழ்ச்சி நடத்த மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

    இந்த சம்பவம் இந்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட கிளம்பி செல்வதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் தொழில் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நீண்டகாலம் திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பண்டிகை காலங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு செலவது வழ்ககம். அந்த அடிப்படையில் வரும் 8 ஆம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பணியாற்றும் பீகார், ஒடிசா, மேற்கு வங்க, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாரை சாரையாக சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில்வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை சென்று அங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்வதால், சென்னை செல்லும் ரயில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஏறிச் செல்வதை பார்க்க முடிந்தது. ஹோலி பண்டிகை முடிந்ததும்திருப்பூரில் பணியாற்ற திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகையையொட்டி, ஹோலிகா தகனம் எனும் நிகழ்வு நடைபெறும். இதில் மசூத் அசார், பப்ஜி கேம் ஆகியவற்றின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. #Holi #HolikaDahan
    மும்பை:

    ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இதேப் போன்று நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்ஆப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.



    இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர்.  இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan


    ×